மணிகண்ட ஐயப்ப சேவா சங்கம் ஆரம்பிக்கும் சமயம் 5 அறங்காவலர்களை கொண்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம், திங்களூர் கிராமத்தினை தலைமையிடமாக கொண்டு 16.06.2021 அன்று தொடங்கபட்டது.
இந்த அறக்கட்டளையின் தொடக்க விழா திருவள்ளுவர் மாவட்டம். செங்குன்றத்தில் 05.09.2021 அன்று நடைபெற்றது. இதில் அகில இந்திய சந்நியாசிகள் சங்க தேசிய துணைத் தலைவர் சுவாமி இராமனந்த மகராஜ் அவர்கள் அறக்கட்டளையை துவக்கி வைத்து, அறக்கட்டளையின் சின்னத்தை அறிமுகப்படுத்தி அருளாசி வழங்கினார்கள்.
அகில இந்தி சந்நியாசிகள் சங்கத்தின் தேசிய இணை செயலாளர் சுவாமி சிவராமனந்தபுரி அவர்கள் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை, சான்றிதழ் மற்றும் கிளைகளுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில் நமது அறக்கட்டளையின் செயல்பாடுகளை அனைத்து உறுப்பினர்களும் அறிந்து கொள்ளும் வகையில் மின்இதழ் “சாஸ்தாமணி” வெளியிட உத்தேசிக்கப்பட்டது. நமது அறக்கட்டளையின் கிளைகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள், சபரிமலை மற்றும் ஐயனின் படைவீடுகள் ஆலயங்கள் திறந்து இருக்கும் நேரங்கள், பூஜை நேரம், பூஜைக்கான கட்டணங்கள் போன்ற விவரங்கள்,ஆயுட்கால உறுப்பினர்களின் பிறந்த நாள், மற்றும் திருமண நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்க உத்தேசிக்கப்பட்டது. இந்த மின் இதழை புண்ணிய பூங்காவனத்தின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் திரு. அம்பாசங்கர் அவர்கள் துவக்கி வைத்து வாழ்த்துரை வணங்கினார்கள்.
ஐய்யனின் மண்டல / மகர காலங்களில் அருள்மிகு ஐயப்பனை தரிசிக்க மாலையிட்டு, விரத நெறிமுறைகளை தெரிவித்து, இருமுடிகட்டி, சபரிமலை அழைத்துச் சென்று, அருள்மிகு ஐயப்பனை தரிசிக்க வழிவகை செய்துவரும் குருமார்களை கௌரவிக்கவும், 18 ஆண்டுகள் சபரிமலை யாத்திரை முடித்த குருமார்களை கௌரவிக்கும் பொருட்டு "குருமரியாதை” என்ற நிகழ்ச்சி நடத்தி அதில் குருமார்களுக்கு "மணிகண்ட ஐயப்ப சேவாரத்தினா”. என்ற விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி கிளையில் நமது சங்கத்தின் சார்பில் நடப்பு வங்கி கணக்கு துவங்ப்பட்டது.
சங்க உறுப்பினர்களின் குடும்பத்தில் யாரேனும் இறந்தால் அவர்களின் ஈமசடங்களுக்கு ரூ.3000/- மாவட்ட அமைப்பின் சார்பில் வழங்ப்பட்டு வருகிறது. இதுவரை 3 குடும்பங்களுக்கு ஈமசடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
திருமணம், புதுமனை புகுவிழா போன்ற சுப காரியங்களுக்கு ரூபாய் 1000/- மாவட்ட அமைப்பின் சார்பில் நிதிவழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இரண்டு குடும்பங்களுக்கு சுபகாரியங்களுக்கான நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதுதவிர கஷ்டபடும் குடும்பங்களுக்கு அவர்களின் குடும்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப ரூ.5000/- மதிப்புள்ள பலசரக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு குடும்பம் பயன்பெற்றது குறிப்பிடத்தகது.
நமது அறக்கட்டளைக்கு கனிவும், பணிவும் ஒருங்கே அமைந்து, நமக்கெல்லாம் ஒளிவிளக்காய் வழிகாட்டியாய் அறிவுரை வழங்கும் ஆலோகசராய், பண்பின் சிகரமாய், நமது அன்புக்கு பாத்திரமாக என் கடன் பணி செய்து கிடப்பதே என்று அகில இந்திய சந்நியாசிகளின் சங்கத்தின் துணை தலைவரான சுவாமி இராமனந்த மகராஜ், அகில இந்திய சந்நியாசிகளின் சங்கத்தின் இணை செயலாளர் சுவாமி சிவராமனந்தபுரி, தென்காசி தொழில் அதிபர் திரு. கண்ணன் மற்றும் அவ்வபோது ஆலோசனை வழங்கி நம்மை ஊக்கபடுத்தி வரும் திரு.பத்மநாபன் ஆடிட்டர், கோடம்பாக்கம் மற்றும் திரு.சிவகுமார் ஆடிட்டர். கே.கே.நகர் ஆகியோருக்கு நமது அறக்கட்டளையின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நமது மின் இதழ் (சாஸ்தா மணி ) மடலை ஒவ்வொரு மாதமும் இலவசமாக தட்டச்சு செய்து இதழ் வெளியீட உதவி வரும் திருவாளர் (Total Solution) நிறுவனத்திற்கு நமது அறகட்டளையின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அறக்கட்டளை நமக்கு என்ன செய்தது என்று கேட்பதைவிட அறக்கட்டளைக்கு நாம் என்ன செய்தோம்" என்ற எண்ணத்தை உள்ளத்திலே தேக்கி, அறக்கட்டளைக்கு நமது கடமையை செவ்வனே செய்வோமாக. எடுத்துக் கொண்ட பணியில் எவன் தூய்மையாகத் தனது கடமையை செய்கின்றானோ அவனே சமூகத்தில் போற்றப்படுபவன்.
"கடமை புரிபவனே கர்மயோகியாவான்" என்று விவேகானந்தர் விளம்புகின்றார். எனவே, நமது அறக்கட்டளை கடமையை ஒரு குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றுகின்றது. கடமையை செவ்வனே புரிபவர்களுக்கு உரிமை உவந்து அளிக்கப்படும். நமது கடமையை தவறாது ஆற்றியதன் பயனால் உரிமையை கேட்பதற்கு முன்பே.
மணிகண்ட ஐயப்ப சேவா சங்கம் பொது அறக்கட்டளை என்ற மாபெரும் இயக்கம் உருவாக்கி இன்று நமக்கு எல்லாம் நல்ல முகவரி தந்து தூண்டா விளக்கின் ஒளியில் வாழ்ந்து வரும் ஐயப்ப பக்தர்களை இத்தருணத்தில் நினைவு கூர்ந்து இன்று நாம். நாளை வேறு ஒருவர், இந்த பொறுப்புக்கு வரலாம். வரவேண்டும். மணிகண்ட ஐயப்ப சேவா சங்கம் பொது அறக்கட்டளை மாபெரும் ஜனநாயக இயக்கம். இங்கு மாறுபாடுகளுக்கு இடமுண்டு. ஆனால் கொள்கைகளில் வேறுபாடுகளுக்கு இடமில்லை. இதனை நம் கருத்தில் கொண்டு இயக்கத்தில் செயலாற்றிட எங்களுக்கு உறுதுணையாக உள்ள செயற்குழு. பொதுக்குழு உறுப்பினர்கள், நண்பர்களுக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்து எதிர்வரும் காலங்களில் நமது அறக்கட்டளையின் நிர்வாகிகள் மேற்கொண்டும் நீண்ட நெடிய பயணத்தில் நாம் பின் தொடர்ந்து செல்வது நம் கடமை எனக் கூறி "சுவாமியே சரணம் ஐயப்பா" என முழங்கிடும்போது கவலை தீர்க்கும் நம் தெய்வம் எனக்கூறி குரல் கொடுத்தால் அருள் மழை பொழியும் நம் தெய்வம் அனைவர்க்கும் நீண்ட ஆயுளையும் நிறைவான செல்வமும் அருள் வேண்டுகிறோம்.
இந்த அறக்கட்டளையின் சேவைகள் ஆண்டு முழுவதும் சிறப்பாக நடக்கவும், மேன்மேலும் இந்த அறக்கட்டளையின் பணி நிலைக்க, மணிகண்டனை வேண்டி வணங்குகிறேன். செழிக்க, தழைக்க மணிகண்டனை வேண்டி வணங்குகிறோம்.