தத்வமஸி!
நீ அதுவாவாய்!!!
பிறருக்கென நீ இருந்தால் உனக்கென இறைவன் இருப்பான்!!!
இதுவே மணிகண்ட ஐயப்ப சேவா சங்கத்தின் தாரக மந்திரம்..,,
குருவை நாடி ஐயனை பார் என்ற வகையில் குருவின் பாதம் பணிந்து வணங்குகிறோம். குருவாகிய தாங்கள் தங்கள் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்களை குழுவாக அழைந்து சென்று மணிகண்டனை தரிசனம் செய்வித்து திரும்பி வருவதை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் இவ்வுலகில் பிறந்தோம், வாழ்ந்தோம், மடிந்தோம் என்று இல்லாமல் ஐயப்பனுக்கும் ஐயப்ப பக்தர்களுக்கும், சேவை செய்திட தமிழ்நாடு முழுவதும் தங்களையும் தங்கள் குழுவையும் மணிகண்ட ஐயப்ப சேவா சங்கத்தில் (MASS) இணைத்து செயல்பட ஐயப்ப பக்தர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.
திரு V.தனசேகரன்
மாநில அமைப்பு செயளாளர் தமிழ்நாடு
தேசிய பொதுச்செயலாளர் உரை
தேசிய அமைப்பு செயலாளர் உரை
இச்சங்கத்தின் நோக்கம் மற்றும் பணிகள்
🙏 தூய்மை படைவீடுகள் என்ற திட்டத்தின் மூலமாக ஐயனின் படைவீடுகளான
ஆரியாங்காவு, அச்சன் கோவில், குழத்துப்புழை, பந்தளம். எரிமேலி ஆகிய திருத்தலங்களில் திருவிழாவின் போது பாதுகாக்கப்பட்ட குடிநீர், அன்னதானம் வழங்குதல் மற்றும் திருவிழா முடிவடைந்த பிறகு தூய்மை பணிகள் செய்ய ஏற்பாடு செய்து வருகிறது.
🙏 அருள்மிகு சரஸ்வதி வந்தனம் என்ற திட்டத்தின் மூலமாக அரசு பள்ளியில் பயிலும் மாணவ/மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் பொதுத் தேர்வின் போது ( 10' +2 ) உணவுகள் வழங்கவும். தேர்வுக்கு தேவையான பேனா, பென்சில். காம்பஸ். நுழைவு சீட்டு வைத்துகொள்ள பவுச் ஆகியவை வழங்கபட்டு வருகிறது.
🙏 அனைவரின் உடல் நலம் காப்போம் என்ற திட்டத்தின் மூலமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனையுடன் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
🙏 மணிகண்ட மாமணியான குருவின் குருவான குருமார்களுக்கு அவர்களை கௌரவிக்கும் வகையில் குருசாமிகளை அழைத்து அவர்களின் ஐயப்ப சேவைகளை பாராட்டி சான்று வழங்கப்பட்டு வருகிறது.
🙏 ஜயப்பன் ஜென்ம நட்சத்திரமான உத்திர நட்சத்திரம் அன்று அனைத்து குருசாமிகளும் தாங்கள் ஊர்களில் உத்திர பூஜைகள் செய்துவருகிறோம்.
🙏 பக்தர்கள் அனைவரும் குழுவாக இணைந்து நமது மாவட்ட பகுதியில் உள்ள கோவில்களில் உழவார பணிசெய்திட அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
🙏 மணிகண்ட ஐயப்ப சேவா சங்கத்தின் நோக்கமே இறைவனுக்கும் இறைமக்களுக்கும் சேவை பணிகள் செய்வதே ஆகும்.
சுவாமி திரு S சுரேஷ்
தேசியபொதுச்செயலாளர்
இந்த அறக்கட்டளையின் தொடக்க விழா திருவள்ளூவர் மாவட்டம். செங்குன்றத்தில் 05.09.2021 அன்று நடைபெற்றது. இதில் அகில இந்திய சந்நியாசிகள் சங்க தேசிய துணைத் தலைவர் சுவாமி இராமனந்த மகராஜ் அவர்கள் அறக்கட்டளையை துவக்கி வைத்து, அறிமுகப்படுத்தி அருளாசி வழங்கினார்கள். அறக்கட்டளையின் சின்னத்தை அகில இந்தி சந்நியாசிகள் சங்கத்தின் தேசிய இணை செயலாளர் சுவாமி சிவராமனந்தபுரி அவர்கள் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை, சான்றிதழ் மற்றும் கிளைகளுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள்.
நாமக்கல் மாவட்டம்
மணிகண்ட ஐயப்ப சேவா சங்கம் நாமக்கல் மாவட்டம் துவக்கவிழா மற்றும் குருமரியாதை விழா மிக சிறப்பாக இன்று 06-11-2022 நடைபெற்றது, என் ஐயன் ஐயப்பனுக்கு எங்கள் மாவட்டம் சார்பாக நன்றியை காணிக்கையாக்குகிறோம் சாமியே சரணம் ஐயப்பா,,,,
மணிகண்ட ஐயப்ப சேவா சங்கத்தில் உறுப்பினராக சேர விரும்பும் ஐயப்ப சேவகர்கள் ஆயுட்கால உறுப்பினர் சேர்க்கை கட்டணமாக ரூபாய் 500 மட்டும் செலுத்தி தங்களுக்கான அடையாள அட்டை மற்றும் ஆயுட்கால உறுப்பினர் சான்றிதல் பெற்றுக்கொள்ளவும்.
புதுச்சேரி மாநிலம்
மணிகண்ட ஐயப்ப சேவா சங்கம் துவக்க விழா கடந்த வருடம் 21/11/2021 ல் நடைபெற்றது, விழாவில் குரு மரியாதை நிகழ்வில் குருவின் குருவான ஐயப்ப குருசாமிகளுக்கு அவர்களின் சேவையை பாராட்டி சான்றிதழ் மற்றும் ஐயப்ப மெடல் ( டாலர் )வழங்கப்பட்டது,
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா,
”சைவம் வைணவம் ஒன்று திரண்டு தவம் புரியும் இடம் சபரிமலை!
தவறி விழுந்த மனிதனை எல்லாம் தழுவிக் கொள்வது சபரிமலை!”
இது ஐயப்பனுக்கு பாடப்படும் பஜனை பாடல் ஆகும்.
இந்த பாடல் வரிகளின் விளக்கம் :
”இங்கு சைவம் என்பது சிவனை குறிக்கும்.
வைணவம் என்பது திருமாலை குறிக்கும்.
சிவனுக்கும் - திருமாலின் அவதாரமான மோகினி என்னும் பெண்ணுக்கும் பிறந்தவரே ஐயப்பன். ஆகவே சைவமும் வைணவமும் இணைந்து தவம் புரியும் இடமே சபரிமலை! பாவ அழுக்கில் தவறி விழுந்த மாந்தரை எல்லாம் தழுவி அணைத்து கொள்ளும் இடம் தான் சபரிமலை! என்பதே ஆகும்!!”
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா,,,,,,,,,